+919789648501 +919487207501 contact@thiruvadidharisanam.com

About Us

திருவடி தரிசனம்

திருமணத் தடைகள் முதல் மேலே குறிப்பிட்ட அனைத்து குறைகளையும் போக்க கூடிய சக்தி வாய்ந்த திருத்தலங்களுக்க அழைத்துச் சென்று இறை தரிசனம் செய்து வைக்கிறோம்.

தாங்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஜாதகத்தை தேர்ந்த ஜோதிட ஆலோசகர்கள் மூலம் ஆராய்ந்து உங்கள் ஜாதகப்படி மகிழ்ச்சியையும் பலன்களையும் தரக்கூடிய ஆலயங்களுக்கு அழைத்துச் சென்று இறை தரிசனம் செய்து வைக்கிறோம். தேவைப்பட்டால் பரிகார பூஜைகளும் செய்ய உதவுகிறோம்.

உங்கள் குறைகள் எதுவாக இருப்பினும் அக்குறைகளை நீக்கி உங்கள் தேவைகளை நிறைவேற்ற கூடிய ஆலயங்களுக்கு தங்களை அழைத்துச் செல்கிறோம்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கு உரிய திருக்கோயில்களுக்கு அழைத்துச் செல்கிறோம்

சைவ, வைணவ ஆலயங்கள், அம்மன் ஆலயங்கள், விநாயகர் மற்றும் முருகன் ஆலயங்கள் மற்றும் அனைத்து ஆலயங்களுக்கும், சித்தர்களின் ஜீவசமாதி கோவில்களுக்கும் தங்கள் விருப்பத்தின் பேரில் அழைத்துச் செல்கிறோம்.

தங்கள் வீட்டிலிருக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கு பாதுகாப்பான முறையில் திருத்தல தரிசனம் செய்து வைக்கிறோம்.

எங்களது ஆன்மீக பயணங்களின் சிறப்பு அம்சங்கள்

Z

மிக உயர்வான தங்குமிடம் மிக உயர்வான சுவையான சைவ உணவுகள் (Delux A/C Room hygienic & tasty,Vegitarian Foods) குளிர்சாதன வசதி கொண்ட சொகுசான கார்கள் ஒவ்வொரு கோயில்களுக்கு செல்லும் போதும் அக்கோவிலின் புராணவரலாறு ஸ்தல வரலாறு மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள், சிற்பங்கள், விஷேஷ சன்னிதிகள் போன்றவற்றை தெளிவாக விவரித்து அங்கே செய்யவேண்டிய வழிபாட்டு முறைகளை கூடவே இருந்து நீங்கள் முறைப்படி செய்ய உதவுகிறோம். மேலும், அக்கோயிலில் சமய பெரியவர்கள் பாடிய பாடல்களை தாங்களும் பாடி இறைவனைத்தொழ உதவுகிறோம் இதன் மூலம் அக்கோவிலை வழிபடுவதன் மூலம் முழுமையான அற்புத பலன்களை நீங்கள் பெறுவது உறுதி செய்யப்படுகிறது

Z

இன்பங்களும் துன்பங்களும் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை இன்பங்கள் ஏற்படும் போது நாம் கடவுளை நினைப்பதில்லை. ஆனால் நமக்கு துன்பம் வரும்பொழுது மட்டும் ஆண்டவன் என்னை ஏன் இப்படி சோதிக்கிறான் என்று சொல்வதே மனித இயல்பு. மனித பிரச்சனைகள் குறைய வேண்டுமென்றால் தெய்வத்திடம் சாவடைவதே சிறந்த வழி.

Z

புண்ணிய பூமியான நமது பாரத கண்டத்தில் ஏராளமான திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அதிலும் தமிழ்நாட்டில் அற்புத பலன்களை அள்ளித்தரும் ஆலயங்கள் ஏராளமாக அமைந்துள்ளன. நமது முன்னோர்களான சித்தர்களும் முனிவர்களும் ரிஷிகளும் மகான்களும் யோகிகளும், ஞானிகளும் தங்களது ஆத்ம சக்தியை ஸ்தாபித்த ஆலயங்கள் இன்றளவும் நமது பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் அற்புத சக்தியும் விளங்குகின்றன. ஆலயங்கள் வெறும் நம்பிக்கை அடிப்படையில் மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாகவும் மிகப்பெரிய பணிகளை ஆற்றிவருகின்றன. வழிபடும் ஒவ்வொரு மனிதனின் உடல் மற்றும் மன அதிர்வுகளை சமன்படுத்தி அவர்களுக்கு தேவையான நேர்மறை சக்தியை ஊட்டக்கூடிய நவீன மருத்துவமனைகளாகவும் ஆலயங்கள் செயல்படுகின்றன. சக்தி வாய்ந்த பழமையான திருத்தலங்களை தரிசனம் செய்வதன் மூலம் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.

Z

கல்லையும் கடவுளாக்கும் மந்திரப் பிரயோக ரகசியத்தை வேதங்களில் இருந்து கற்றறிந்தனர் நமது மகரிஷிகள், இறைவனின் திருமேனியைப் போன்றே ஆகம, சிற்ப சாஸ்திரங்களின் விதிகளின்படி பகவானின் திருமேனியைச் சிலைகளாகவோ அல்லது அழகிற்கு அழகு செய்யும் பஞ்சலோக விக்கிரகங்களாகவோ வடித்து, அவற்றினுள் தெய்வீக பிராண சக்தியைச் செலுத்தும் அதி அற்புத பிரயோக முறைக்குத்தான் மகா சம்ப்ரோட்சணம் அல்லது’ மகா கும்பாபிஷேகம் எனப் புராதன நூல்கள் கூறுகின்றன.

Z

திருக்கோயிலின் ராஜகோபுரத்திலிருந்து உள்ளே கருவறை வரையிலும் மந்திரப் பிரயோகம் செய்யப்பட்டிருப்பதால்தான் ராஜகோபுர நுழைவாயிலினுள் காலடி எடுத்துவைத்த அந்த விநாடியே நம் உள்ளம் தூய்மையாகிவிடுவதை நம்மால் உணரமுடிகிறது. மனித பிறவி சபலங்களுக்கு எளிதில் ஆளாகிவிடுகிறது அதனால் பல தவறுகளைச் செய்ய நேரிடுகிறது. அந்தத் தவறுகளின் விளைவாக கிரக தோஷங்கள் மக்களைப் பீடிக்கின்றன. அதனால் பிணி, துயரம், வறுமை போன்ற பலவித கஷ்டங்கள் நம் நல்வாழ்வைச் சீரழித்து விடுகின்றன. பல துன்பங்களுக்கும் காரணமான நம் பாவங்களை எளிதில் விலக்கி கொள்ள தன்னிகரற்ற சாதனமே திருக்கோயில்களாகும்.

Z

பாரத புண்ணியபூமியில் எத்தனை எத்தனையோ திருக்கோயில்கள் இருப்பினும் சக்தியினும் அளவிலும் மிகப் பெரிய திருக்கோயில்களைத் தமிழகத்தில் மட்டுமே காணமுடியும். இத்திருக்கோயில்கள் சாதாரண கட்டடங்கள் அல்ல ஆதலால் நமக்கு எப்போதெல்லாம் நேரமும் வசதியும் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இத்திருக்கோயில்களுக்குச் சென்று அங்கு அருள்பாளிக்கும் இறைவனையும் இறைவியையும் தரிசித்து அதன்பலனாக துன்பமில்லா இன்ப வாழ்க்கையை நாமும் நம் குடும்பமும் குழந்தைகளும் பெறலாம்.

Z

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளான திருமணதடைகள், குழந்தையின்மை. உடல்நலக்குறைவு, குழந்தைகள் கல்வியில் மந்தமாக இருப்பது, காரிய தடைகள், செய்யும் தொழிலில் நஷ்டம், பொருளாதார தட்டுபாடுகள், தம்பதிகளுக்குள் ஒற்றுமையின்மை, வேலையின்மை, மனஉளைச்சல், ஜாதக ரீதியான தோஷங்கள் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய சக்திவாய்ந்த ஆலயங்கள் நம் அருகிலேயே உள்ளன. அந்த ஆலயங்களை தரிசிப்பதன் மூலம் நாம் நிம்மதியும் மகிழ்ச்சியும் பெறலாம்.

Open chat
1
Book Now!
Call Now Button